எல்லாமே இருந்தது,
நினைத்தவை நடந்தன,
எதிர்பார்த்தவை கிடைத்தன.
தெனாவட்டமாக
பேசித் திரிந்தேன்.
கடவுளரின் ஆலயங்களை
செப்பனிடச் செலவழிப்பதெல்லாம் வீண்,
என்று ஆணவமாகப் பேசினேன்.
காலம் ஓடியது,
ஒரே ஒரு தோல்விதான்!
எதிர்பார்த்த பணம் வரவில்லை.
துவண்டு போனேன்,
துடிதுடித்தேன்,
துன்பத்திற்கு ஆட்பட்டேன்.
துன்பம் தாங்காமல்,
செல்வத்தை இழந்த வலியில்,
மனதில் கவலைகள் சூழ,
எதிர்காலம் பற்றி பயம் நிறைந்து,
ஆறுதல் தேடி,
கவலைகளை துறக்க,
துயரத்தை போக்க,
கோவில் கோவிலாகப் போக ஆரம்பித்தேன்.
“கடவுளே!”
என்று வேண்டி நின்றேன்.
அறிவன் பெருமான்