நம்பிக்கை


ஒரு வெண்ணிறப் புறா
தரையில் தேங்கியிருந்த
தண்ணீரை உறிஞ்சிக் குடிப்பதை
பூங்காவில் கண்டேன்.

அருகில் ஒருவன்
நெருங்கி வருவதைக் கண்டு
பதற்றமாய் பறந்து
வானத்தின் மேலே உயர்ந்தது.

அவனொருவன் நல்லவனா கெட்டவனா
என்பதைத் தாண்டி,
பாதுகாப்பு தேடி
உயரத்தில் தன்னை நிறுத்திக் கொண்டது.

அந்த ஒரு கணம்
நம்பிக்கைகளை மீறி
எச்சரிக்கையுணர்வால்
நிரம்பியது அதன் வாழ்வு.

அறிவன் பெருமான்