மண் மீது கொண்ட ஆசை
குறைவதே இல்லை.
பிறந்த தேசத்தின் மண்,
வளர்ந்த தேசத்தின் மண்,
குடியேறிய தேசத்தின் மண்
என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல்
நீள்கிறது மண் மீதான ஆசை.
நமக்கு சொந்தமாக
ஒரு சதுர நிலம் இருப்பது
நினைவுகளில்
தொடர்ந்து இனிக்கச் செய்கிறது.
அறிவன் பெருமான்