மாற்றம்


என்னுடைய வசதியும்,
உன்னுடைய அழகும்,
மிகுந்திருந்தபோது,
நாம் காதலித்தபடியே இருந்தோம்.

வசதியோ அழகோ குறைந்தால்,
காதலிக்க நேரமில்லை.
விடைபெறுவோம் நண்பர்களாய்,
என்று மாறியது காலத்தின் சொற்படலம்.

அறிவன் பெருமான்